search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பள்ளி முதல்வர்"

    • ப்ரின்சிபல் மாணவரிடம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பாக்கியுள்ளது என கூறியுள்ளார்.
    • இது தொடர்பாக மாணவன் மற்றும் பள்ளி ப்ரின்சிபல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    மத்திய பிரதேச மாநிலத்தின் குவாலியரில் இயங்கி வரும் சிபிஎஸ் தனியார் பள்ளி கஞ்ச் மில் பகுதியில் இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 11 ஆம் வகுப்பில் பயின்று வந்த மாணவன் தேர்வில் தோல்வியுற்றதாக கூறப்படுகிறது.

    தேர்வில் தோல்வி அடைந்ததை அடுத்து, பள்ளிப் படிப்பை நிறுத்திவிட மாணவன் முடிவு செய்தான். அதன்படி பள்ளிக்கு சென்ற மாணவன் தனக்கு மாற்றுச் சான்றிதழ் வழங்குமாறு கேட்டுள்ளான். அப்போது பள்ளியின் ப்ரின்சிபல் மாணவரிடம் பள்ளிக்கு செலுத்த வேண்டிய கட்டணம் பாக்கியுள்ளது என கூறியுள்ளார்.

    மேலும் கட்டண பாக்கியை செலுத்தியதும் மாற்றுச் சான்றிதழ் வழங்குவதாக தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக மாணவன் மற்றும் பள்ளி ப்ரின்சிபல் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருகட்டத்தில் வாக்குவாதம் முற்றியதை அடுத்து, பள்ளியின் ப்ரின்சிபல் மற்றும் மேலும் இரண்டு ஆசிரியர்கள் சேர்ந்து கொண்டு மாணவனை கடுமையாக தாக்கினர்.

    தொடர்ச்சியாக தாக்குதலுக்கு ஆளான மாணவன் அவர்களிடம் இருந்து தப்பிக்க ஆசிரியர்களை தள்ளி விட்டுள்ளான். பள்ளியில் இருதரப்பும் மோதிக் கொண்ட விவகாரம் காவல் நிலையம் சென்றடைந்தது. இடையே ஆசிரியர்களால் தாக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற பிறகு, காவல் நிலையத்தில் ஆசிரியர்கள் மீது புகார் அளித்தான்.

    இதே போன்று பள்ளி ப்ரின்சிபல் தரப்பிலும் மாணவன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக ஹஜிரா காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. போலீசார் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணையை துவங்கியுள்ளனர். 


    • இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
    • பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர்.

    மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டம், தலேகான் தபாடே நகரில் பள்ளி முதல்வரை இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் கோட்ஸ் ரீட், மாணவர்களை பிரேயரில் கிறிஸ்தவ பாடல் பாடும்படி கூறியதாக  குற்றம்சாட்டி இந்த தாக்குதலை நடத்தி உள்ளனர். மேலும், பள்ளியில் மாணவிகள் மற்றும் மாணவிகளுக்கான கழிவறைகளுக்கு இடையே கேமரா பொருத்தப்பட்டிருப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    பள்ளிக்குள் நடந்த இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் கிழிந்த சட்டையுடன் பள்ளி முதல்வர் படிக்கட்டில் ஏறுவதும், அவரை சிலர் துரத்துவதும் பதிவாகி உள்ளது. ஒரு நபர் முதல்வரை பின்னால் வந்து வேகமாக தாக்குகிறார். மற்றொரு நபர் அவரை தடுக்கிறார்.

    இதுபற்றி தகவல் அறிந்த போலீசார், பள்ளிக்கு விரைந்து சென்று அந்த கும்பலை தடுத்து நிறுத்தி நிலைமையை கட்டுப்படுத்தினர். மேலும் இதுதொடர்பாக விசாரணை நடத்தினர்.

    இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித் சாவந்த் கூறியதாவது:-

    ஒரு சில பெற்றோர்கள், இந்துத்துவா அமைப்பைச் சேர்ந்தவர்களுடன் சேர்ந்து பள்ளி முதல்வரை தாக்கி அவரது ஆடைகளைக் கிழித்துள்ளனர். மேலும், ஆட்சேபம் தெரிவிக்கப்பட்ட கேமராவானது, கழிவறைக்கு வெளியே பொருத்தப்பட்டுள்ளது. மாணவர்கள் தினமும் காலையில் ஒரு கிறிஸ்தவ பிரார்த்தனை பாடலை பாடுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாக அந்த நபர்கள் கூறினர். ஆனால் "ஓ லார்ட்' என்று தொடங்கும் பொதுவான பிரார்த்தனை பாடல் இது. இது பைபிளில் உள்ள ஒரு வசனம் என்று பெற்றோர்கள் கூறினார்கள். ஆனால் ஜெபத்தில் மதமாற்றம் குறித்தோ அல்லது பைபிளில் இருந்து எந்த வாசகமோ குறிப்பிடப்படவில்லை.

    பெற்றோர்கள் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் பள்ளி தரப்பில் புகார் கொடுக்கப்படவில்லை. பள்ளி முதல்வரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி பள்ளி முதல்வர் மீது தாக்குதல் நடத்தியதாகவும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவருக்கு ஆதரவாக இருப்பதாகவும் பள்ளி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை அடையாளம் கண்ட போலீசார் பின்னர் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.
    • படுகாயமடைந்த பள்ளி முதல்வரை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    உத்தரப் பிரதேசம் மாநிலம் சீதாபூரைச் சேர்ந்த மாணவர் குரிந்தர் சிங். 12-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்நிலையில், குரிந்தர் சிங் தான் படிக்கும் பள்ளியில் உடன் படிக்கும் மற்றொரு மாணவரிடையே கடந்த வெள்ளிக்கிழமை தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதனால், குரிந்தர் சிங்கை அப்பள்ளி முதல்வர் ராம் சிங்மா கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த மாணவர் குரிந்தர் சிங்கை பழிவாங்கும் நோக்கத்தில் நேற்று ஆதர்ஷ் ராம்ஸ்வரூப் கல்லூரியில் பள்ளி முதல்வரை துப்பாக்கியால் இரண்டு முறை சுட்டுள்ளார். இதில் பள்ளி முதல்வர் ராம் சிங் வர்மா படுகாயமடைந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சோதனை செய்தனர். மேலும் கல்லூரியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில், துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்ட மாணவரை அடையாளம் கண்ட போலீசார் பின்னர் கைது செய்து போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

    மேலும், படுகாயமடைந்த பள்ளி முதல்வரை லக்னோவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

    கேமரூன் நாட்டில் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர், மாணவர்கள் உள்பட 79 பேரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. #StudentsKidnapped
    யவுன்ட்:

    மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றாக விளங்குவது கேமரூன் நாடு. அந்த நாட்டில் தனி நாடு கேட்டு ஆங்கிலோபோன் என்னும் பயங்கரவாத இயக்கத்தினர் போராடி வருகின்றனர்.

    இந்நிலையில், கேமரூனின் வடமேற்கு பகுதியின் தலைநகரான பமெண்டா அருகே நீவின் என்ற கிராமத்தில் உள்ள ஒரு மேல்நிலைப்பள்ளிக்குள் துப்பாக்கி ஏந்திய பயங்கரவாதிகள் இன்று உள்ளே புகுந்தனர்.

    அங்கு படித்து வந்த 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் 78 பேர் மற்றும் பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர், டிரைவர் ஆகியோரை துப்பாக்கி முனையில் பயங்கரவாதிகள் கடத்திச் சென்றனர்.

    கடத்தி செல்லப்பட்டவர்கள் எங்கு கொண்டு செல்லப்பட்டனர், பயங்கரவாதிகளின் கோரிக்கைகள் என்ன என்பன போன்ற விவரங்கள் உடனடியாக தெரியவரவில்லை. கடத்தலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளை தேடும் பணியை கேமரூன் அரசு முடுக்கி விட்டுள்ளது. #StudentsKidnapped
    ×